கங்குவாவில் பாராட்டை பெறும் கார்த்தி கேமியோ!

kanguva

சூர்யா நடிப்பில் இன்று பிரமாண்டமாக வெளியாகியுள்ள கங்குவா படத்தில் கார்த்தி நடித்த கேமியோ கதாபாத்திரம் வரவேற்பை பெற்று வருகிறது. கங்குவா படத்தில் கார்த்தி கெஸ்ட் ரோலில் நடித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது. ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில் சிவா இயக்கத்தில் சூர்யா, பாபி தியோல், திஷா பதானி உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் 'கங்குவா'. பீரியட் டிராமாவாக உருவாகியுள்ள கங்குவா திரைப்படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார். சூர்யா திரை வாழ்வில் அதிக பட்ஜெட் கொண்ட திரைப்படமாக கங்குவா உருவாகியுள்ளது.

சூர்யா நடிப்பில் இரண்டரை ஆண்டுகளுக்கு பிறகு திரையரங்குகளில் படம் வெளியாகியுள்ளதால் அவரது ரசிகர்கள் காலை முதலே திரையரங்குகளில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். சூர்யா கங்குவா, ஃபிரான்சிஸ் என இரட்டை வேடங்களில் இப்படத்தில் நடித்துள்ளார். கங்குவா திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.



பலநூறு ஆண்டுகளுக்கு முன் நடக்கும் கதையில் வரும் சூர்யா மற்றும் சம காலத்தில் வரும் சூர்யா ஆகிய இரண்டு கதாபாத்திரத்திற்கும் கனெக்‌ஷன் உள்ளது போன்று கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நடிகர் கார்த்தி இப்படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார். படத்தின் கிளைமாக்ஸில் கார்த்தி தோன்றுவதாக கூறப்படும் நிலையில், ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

மேலும் கங்குவா படத்தில் கார்த்தி கதாபாத்திரத்தை பாராட்டி அதற்குள் ரசிகர்கள் சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர். முன்னதாக கங்குவா திரைப்படம் வெளியாகும் முன் ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பு நிறுவனம் தனது எக்ஸ் பக்கத்தில் ‘தம்பி வரார் வழிவிடு ’ என பதிவிட்டது. கார்த்தி கேமியோ ரோலில் கங்குவா படத்தில் நடிக்கிறார் என்பது இந்த பதிவு மூலம் கிட்டதட்ட உறுதியானது.

அதேபோல் நடிகர் கார்த்தி இன்று கங்குவா ரிலீஸை முன்னிட்டு சூர்யா ரசிகர்களுக்கு வாழ்த்து தெரிவித்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுருந்தார். இதனிடையே விக்ரம் பட கிளைமாக்ஸில் சூர்யா ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் தோன்றி மிரட்டியதை போன்று, கங்குவா படத்தில் கிளைமாக்ஸில் கார்த்தி கேரக்டர் மிரட்டுவதாக ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர். கங்குவா 2ஆம் பாகத்தில் கார்த்தி வில்லனாக நடிக்கவுள்ளதாகவும் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

Share this story