டிசம்பர் 5ம் தேதி ரிலீஸ் ஆகும் கார்த்தி படம் -என்ன டைட்டில் தெரியுமா ?

karthi
நடிகர் கார்த்தி பருத்தி வீரன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் .பின்னர் இவர் பையா ,ஆல் இன் ஆல் அழகுராஜா மற்றும் சிறுத்தை போன்ற வெற்றி படங்களில் நடித்து புகழ் பெற்றார் .இவர் தற்போது நடித்து வரும் படத்தின் அப்டேட் பற்றி நாம் இப்பதிவில் காணலாம் 
கார்த்தி நடிப்பில் ‘‘ மெய்யழகன்’’ திரைப்படம் இப்போது வரை பேசு பொருளாக பலரிடமும் பாராட்டுகளை அள்ளி வருகிறது. ரசிகர்களிடமும் வரவேற்பைப் பெற்றது. இதனை தொடர்ந்து ‘சூது கவ்வும்’, ‘காதலும் கடந்து போகும்’ உள்ளிட்ட படங்களின் இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில் ’வா வாத்தியார்’ திரைப்படத்தில் கார்த்தி நடித்து முடித்தார்.
இந்த படத்தில் கீர்த்தி ஷெட்டி, சத்யராஜ், ராஜ்கிரண் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்நிலையில் “வா வாத்தியார்” திரைப்படம் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் மாதம் 5ஆம் தேதி படம் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

Share this story