100 கோடி கிளப்பில் இணைந்து சாதனை படைத்த ‘சர்தார்’ வெளியான சூப்பர் தகவல்.

photos

கார்த்தி நடிப்பில் வெளியான ‘சர்தார்’ திரைப்படம் தற்பொழுது 100 கோடியை தொட்டு சாதனை படைத்துள்ளது.

photos

கார்த்தியின் அதிரடி ஆக்ஷனில் கடந்த தீபாவளியை முன்னிட்டு வெளியான திரைப்படம்சர்தார். பி.எஸ். மித்ரன் இந்தப் படத்தை இயக்கியிருந்தார். தண்ணீரை வைத்து நடக்கும் முறைகேடு மற்றும் பிளாஸ்டிக் பாட்டில் தண்ணீரால் ஏற்படும் உடல்நலக் கோளாறுகள் ஆகியவற்றை மையமாக வைத்து  ஆக்ஷன் த்ரில்லராக உருவான  படத்தில், ரஜிஷா விஜயன், லைலா, ராஷி கண்ணா, சங்கி பாண்டே உள்பட பலர் நடிப்பில் நடித்துள்ளனர்.

photos

 படம் வெளியாகி வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.படம் வெளியான 12 நாட்களிலேயே சுமார் 85 கோடி ரூபாய் வசூலை ஈட்டியது. இந்த நிலையில் தற்பொழுது 100 கோடி ரூபாய் வசூலித்து கார்தியின் சர்தார் திரைப்படம் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது. இந்த தகவல் படக்குழு மற்றும் ரசிகர்களுக்கு உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

photos

சர்தார் படத்தின் இயக்குநர் பி.எஸ். மித்ரனுக்கு, தயாரிப்பாளர் லக்ஷ்மன் லான்சன் புதியக் கார் ஒன்றை பரிசாக வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this story