"சூர்யாவை அப்பா திட்டிக்கொண்டே இருப்பார்"-கார்த்தி கூறும் சம்பவம்

karthi

தனது அண்ணன் சூர்யாவை தந்தை சிவகுமாரிடம் சிக்க வைத்தது குறித்து கார்த்தி பேசியுள்ளார். அவர் கூறுகையில், ‘நான் 12ம் வகுப்பு சென்றபோது, சூர்யா கல்லூரியில் படித்தார்.
தினமும் தியேட்டரில் படம் பார்ப்பது, நண்பர்களுடன் அரட்டையடிப்பது என்று, எப்போதுமே ஊர் சுற்றிக்கொண்டிருப்பார். அப்போது, ‘எங்கு சுற்றினாலும், எங்கு சென்றாலும், இரவு நேரத்தில் வீட்டுக்கு வந்துவிட வேண்டும்’ என்று அப்பா கண்டிஷன் போடுவார். இரவில் வெளியே தங்குவதை அவர் அனுமதிக்க மாட்டார். வீட்டின் கதவுகள் இரவு 12 மணிக்கு பூட்டப்படும். நான் 12 மணி வரைக்கும் விழித்திருப்பேன். சூர்யா வந்து கதவை திறப்பார். அப்போது சத்தம் கேட்கும். உடனே அவரை அப்பாவிடம் மாட்டி விட்டுவிடுவேன். பிறகு சூர்யாவை அப்பா திட்டிக்கொண்டே இருப்பார். முதலில் அப்பா அவராகவே தூக்கத்தில் இருந்து எழுந்து வந்து தன்னை திட்டுவதாக சூர்யா நினைத்துக் கொண்டிருந்தார். சில நாட்களுக்கு பிறகுதான், அவரை வசமாக சிக்க வைத்தது நான்தான் என்ற உண்மை அவருக்கு தெரிந்தது’ என்றார்.

Share this story