கார்த்தியின் 'ஜப்பான்'-ஐ கைப்பற்றிய பிரபல நிறுவனம் .... எவ்வளவு தொகைக்கு தெரியுமா ?

japan

கார்த்தியின் 'ஜப்பான்' படத்தின் ஓடிடி உரிமையை பிரபல நிறுவனம் கைப்பற்றியுள்ளது. 

 சர்தார் படத்திற்கு பிறகு கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘ஜப்பான்’. தலைப்பை போன்று படமும் வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகி வருகிறது. ஜோக்கர், ஜிப்ஸி, குக்கூ ஆகிய படங்களை தொடர்ந்து ராஜூ முருகன் இயக்கத்தில் இப்படம் உருவாக உள்ளது. இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக அனு இமானுவேல் நடிக்கிறார். 

இயக்குனர் விஜய் மில்டன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஜிவி பிரகாஷ் இசையில் பாடல்கள் உருவாகவுள்ளது. பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இந்த ஆண்டு  இறுதியில் படத்தை வெளியிட படக்குழு திட்டமிடப்பட்டுள்ளது.

japan

இப்படத்தின் படப்பிடிப்பு தூத்துக்குடி பகுதியில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் ஓடிடி உரிமையை பிரபல நிறுவனமான நெட்ஃபிளிக்ஸ் கைப்பற்றியுள்ளது. இதுவரை இல்லாத  அளவிற்கு அதிக தொகைக்கு இப்படத்தின் ஓடிடி உரிமையை அந்நிறுவனம் வாங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

 

Share this story