பரட்ட தல..டெரர் லுக்கில் கார்த்தி... பொங்கல் ஸ்பெஷல் போஸ்டர் வெளியீடு !

japan

 பொங்கலையொட்டி கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் ‘ஜப்பான்’ படத்தின் ஸ்பெஷல் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. 

சமீபகாலமாக கார்த்தி நடிப்பில் உருவாகி வெளியாகி வரும் திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் ‘சர்தார்’  படத்திற்கு பிறகு கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘ஜப்பான்’. பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. 

japan japan

ஜோக்கர், ஜிப்ஸி, குக்கூ ஆகிய படங்களை தொடர்ந்து ராஜூ முருகன் இயக்கத்தில் இப்படம் உருவாகி வருகிறது.  இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக அனு இமானுவேல் நடிக்கிறார். இயக்குனர் விஜய் மில்டன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஜிவி பிரகாஷ் இசையில் பாடல்கள் உருவாகி வருகிறது.

japan

இப்படத்தின் படப்பிடிப்பு தூத்துக்குடி பகுதியில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பொங்கல் பண்டிகையையொட்டி இப்படத்தின் மிரட்டலான போஸ்டர் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் பரட்ட தல, டெரர் லுக்கில் இருக்கும் புகைப்படம் வரவேற்பை பெற்றுள்ளது. 

Share this story