விநாயகர் சதுர்த்தியை குறி வைக்கும் கார்த்தி... ‘ஜப்பான்’ புதிய அப்டேட்

japan

கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் ‘ஜப்பான்‘ படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. 

தொடர்ந்து வெற்றிகளை குவித்து வரும் கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘ஜப்பான்’. இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக அனு இமானுவேல் நடித்து வருகிறார். இயக்குனர் விஜய் மில்டன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஜிவி பிரகாஷ் இசையில் பாடல்கள் உருவாகவுள்ளது.

japan

பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. ஜோக்கர், ஜிப்ஸி, குக்கூ ஆகிய படங்களை தொடர்ந்து ராஜூ முருகன் இயக்கத்தில் இப்படம் உருவாகி வருகிறார்.‌ வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்தின் பணிகள் இறுதிக்கட்டத்த அடைந்துள்ளது. 

 தூத்துக்குடி உள்ளிட்ட பல பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. இதையடுத்து அடுத்தக்கட்ட படப்பிடிப்பு வரும் ஜூன் மாதம் முதல் வாரத்தில் சென்னை ஈவிபி பிலிம் சிட்டியில் தொடங்கவுள்ளது. இதற்காக 200 குடில்கள் கொண்ட பிரம்மாண்டமாக செட் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நடிகர் கார்த்தி தனது 46வது பிறந்தநாளை வரும் மே 25-ஆம் தேதி கொண்டாடவுள்ளார். இதையொட்டி 'ஜப்பான்' படத்தின் ரிலீஸ் தேதி மற்றும் டீசர் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட உள்ளது. அதன்படி விநாயகர் சதுர்த்தியையொட்டி வரும் செப்டம்பர் 15-ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. 

Share this story