கார்த்தி படத்தை தட்டித் தூக்கிய ஆர்யா... உருவாகிறது சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகம் !

Paiyaa

கார்த்தி நடிப்பில் உருவான ‘பையா’ படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் ரசிகர்களை எளிதில் கவர்ந்த நடிகர்களில் ஒருவர் கார்த்தி. கடந்த 2010-ஆம் ஆண்டு அவர் நடிப்பில் உருவாகி சூப்பர் ஹிட்டடித்த திரைப்படம் ‘பையா’. கார்த்தி வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்திய இப்படத்தை லிங்குசாமி இயக்கியிருந்தார். 

Paiyaa

இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக தமன்னா நடித்திருந்தார். முழுக்க முழுக்க ஹைவேயில் இந்த படம் படமாக்கப்பட்டது. இந்த ஆக்ஷன் சண்டைக்காட்சிகள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதோடு யுவனின் இசையில் உருவான பாடல்கள் ரசிகர்களின் மனதை கொள்ளைக் கொண்டது. 

Paiyaa

இந்நிலையில் இந்த படம் உருவாகி 12 ஆண்டுகள் கழித்து அதன் இரண்டாம் பாகத்தை இயக்குனர் லிங்குசாமி இயக்க உள்ளார். இந்த படத்திற்கான முதற்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் கார்த்திக்கு பதிலாக ஆர்யா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. 

 

Share this story