பூஜையுடன் தொடங்கிய 'கார்த்தி'யின் அடுத்த படம் - கதாநாயகி இவர்தான்!...
பருத்திவீரன் படத்தின் மூலமாக கார்த்தி கோலிவுட்டில் நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து பல படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வருகிறார். தற்போது இவர் வந்தியத்தேவன் கதாப்பாத்திரத்தை ஏற்றுநடித்துள்ள வரலாற்று காவியமான பொன்னியின் செல்வன் பாகம்2 திரைப்படம் ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியாகவுள்ளது. அடுத்ததாக ‘ஜப்பான்’ திரைப்படமும் வரும் தீபாவளியை முன்னிட்டு வெளியாக உள்ளது. இந்த நிலையில் கார்த்தியின் அடுத்த படத்திற்கான பூஜை இன்று நடந்துள்ளது.
கார்த்தியின் இந்த படத்தை நலன் குமாரசாமி இயக்க இருப்பதாவும், படத்தில் கார்த்தியின் ஜோடியாக காயத்ரி பரத்வாஜ் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ்நாராயணன் இசையமைக்கவுள்ளார். இந்த படத்தை பிரம்மாண்ட பொருட்செலவில் ஸ்டூடியோ கிரீன் தயாரிக்கின்றனர். சூர்யா நடிக்கும் ‘சூர்யா42’, விக்ரமின் தங்கலான் படங்களை தயாரிக்கின்றனர். அதுமட்டுமல்லாமல் வரும் 30அம் தேதி வெளியாகவுள்ள ‘பத்துதல’ படத்தையும் தயாரித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கூடுதல் தகவலாக படத்தின் படப்பிடிப்பு மே மாதம் முதல் வாரத்தில் தொடங்கலாம் என கூறப்படுகிறது.