100 கோடி கிளப்பில் இணைந்த ‘சர்தார்’... 4வது முறையாக வெற்றி மகுடம் சூடிய கார்த்தி !

sardar

 கார்த்தியின் ‘சர்தார்’ திரைப்படம் 100 கோடி வசூலை ஈட்டியுள்ளது. 

தந்தை மற்றும் மகன் என இருவேறு கதாபாத்திரங்களில் நடிகர் கார்த்தி நடித்துள்ள திரைப்படம் ‘சர்தார்’. ‘இரும்புத்திரை’ படத்திற்கு பிறகு தொடர்ந்து வெற்றிகளை கொடுத்து வரும் பி எஸ் மித்ரன் இந்த படத்தை இயக்கினார். சொன்னது போலவே இந்த படத்தையும் வெற்றிப் படமாக்கி ரசிகர்களின் ஆதரவை பெற்றார். 

sardar

தண்ணீர் மாஃபியா உளவாளியின் வாழ்க்கை பற்றி பேசும் படமாக இப்படம் உருவாகி கடந்த மாதம் வெளியானது. இந்த படத்தில் பி எஸ் மித்ரனின் கதை மற்றும் திரைக்கதை பலமாக பின்னப்பட்டிருந்தது. அதேபோன்று கார்த்தியின் மிரட்டலான நடிப்பும், ஜிவி பிரகாஷின் வெறித்தனமாக பின்னணி இசையும் படத்தின் வெற்றிக்கு காரணமாக அமைந்துள்ளது. 

பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் 40 கோடி செலவில் உருவான இப்படம் தற்போது 100 கோடி வசூல் சாதனை படைத்துள்ளது. இதனால் படக்குழுவினர் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். இந்த வெற்றியை தொடர்ந்து சமீபத்தில் இயக்குனர் பி எஸ் மித்ரனுக்கு சொகுசு கார் ஒன்று பரிசளிக்கப்பட்டது. அதேநேரம் தோழா, கைதி, பொன்னியின் செல்வன் ஆகிய படங்களுக்கு பிறகு கார்த்தியின் 4வது படமாக சர்தார் 100 கோடி சாதனையை படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  

Share this story