பிரம்மாண்ட செட்டில் படமாகும் 'ஜப்பான்'... கார்த்தி படத்தின் புதிய அப்டேட் ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌

japan

 கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் 'ஜப்பான்' படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. 

கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘ஜப்பான்’. பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. ஜோக்கர், ஜிப்ஸி, குக்கூ ஆகிய படங்களை தொடர்ந்து ராஜூ முருகன் இயக்கத்தில் இப்படம் உருவாகி வருகிறார்.‌ ஜிவி பிரகாஷ் இசையில் பாடல்கள் உருவாகவுள்ளது.

japan

இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக அனு இமானுவேல் நடித்து வருகிறார். இயக்குனர் விஜய் மில்டன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளில் தயாராகி வரும் இப்படம் வரும் தீபாவளிக்கு வெளியாக உள்ளது. ‌  வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளில் படமாக்ககப்பட்டுள்ளது‌. 

இந்நிலையில் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஒரு பகுதியில் 200 குடில்கள் கொண்ட பிரம்மாண்டமான கிராமம் போன்று செட் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள இந்த படப்பிடிப்பு வரும் ஜூன் 24-ஆம் தேதியுடன் நிறைவுபெற்றுவிடும் என கூறப்படுகிறது. இதையடுத்து இரண்டு பாடல்கள் மட்டும் படமாக்கப்படவுள்ளது‌. அதேநேரம் படப்பிடிப்பு நிறைவுபெற உள்ளதால் விரைவில் டீசர் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.  

 

Share this story