கார்த்தி நடிக்கும் மெய்யழகன் ரிலீஸ் தேதி அறிவிப்பு
1721218611206

கார்த்தி நடிக்கும் மெய்யழகன் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜோதிகா - சூர்யா தயாரிப்பில், ‘96' படத்தை இயக்கிய பிரேம் குமார் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் அவரது 27வது படம் ‘மெய்யழகன்’... இப்படத்தில் நடிகர் அரவிந்த் சாமி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அந்த கதாபாத்திரம் கார்த்தியின் ஹீரோயிசத்திற்கு நிகராக இருக்கும் என கூறப்படுகிறது. முதல்முறையாக கார்த்தியுடன் அரவிந்தசாமி நடிக்கவிருப்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரபல ஒளிப்பதிவாளர் சத்யம் சூரியன் இப்படத்திற்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றவுள்ளார்.
இந்நிலையில் கார்த்தி நடிக்கும் மெய்யழகன் திரைப்படம் செப்டம்பர் 27 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.