கார்த்தியின் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ வெளியாகி 5 ஆண்டுகள் நிறைவு... கொண்டாடும் ரசிகர்கள் !

theeran adhigaaram ondru

கார்த்தியின் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ வெளியாகி 5 ஆண்டுகள் நிறைவுபெற்றதையடுத்து அந்த படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். 

எச்.வினோத் இயக்கத்தில் கார்த்தியின் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டடித்த திரைப்படம் தான் ‘தீரன் அதிகாரம் ஒன்று’. இந்த படத்தில் கார்த்தி, ரகுல் ப்ரீத் சிங், அபிமன்யு சிங் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்த இந்த படம் கடந்த நவம்பர் 17-ஆம் தேதி 2017 அன்று வெளியானது. 

theeran adhigaaram ondru

ஆபரேஷன் பவேரியா வழக்கின் உண்மையான நிகழ்வுகளை அடிப்படையாக வைத்து இப்படம் உருவானது. வெளி மாநிலத்திலிருந்து வரும் கொள்ளையர்கள் எப்படி தமிழகத்தில் கொள்ளையடிக்கிறார்கள் என்பது இப்படம். இந்த படத்தின் திரைக்கதையை சிறப்பான அமைந்திருந்த இயக்குனர் எச் வினோத்திற்கு பாராட்டுக்கள் குவிந்தன. பிலிம் பேர் உள்ளிட்ட பல விருதுகளும் குவிந்தது. 

theeran adhigaaram ondru

வசூல் வேட்டையில் ஈடுபட்ட இப்படம் வெளியாகி இன்றுடன் 5 வருடங்களை கடந்துள்ளது. இதையொட்டி இந்த படத்தை சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இதையொட்டி படக்குழுவினர் போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டுள்ளனர். 

 

 

 

Share this story