மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கும் கார்த்தி: படத்தின் கதைக்களம் என்ன?

mari selvaraj

மாரி செல்வராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிக்க உள்ளதாக தகவல் வெளியான நிலையில், அந்தப் படத்தின் கதைக்களம் குறித்து தெரியவந்துள்ளது.

’மெய்யழகன்’ படத்துக்குப் பிறகு ‘வா வாத்தியார்’ படப்பிடிப்பை முடித்துக் கொடுத்துவிட்டார் கார்த்தி. தற்போது மித்ரன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘சர்தார் 2’ படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். அதற்குப் பிறகு தமிழ் இயக்கத்தில் உருவாகும் ‘கார்த்தி 29’ மற்றும் ‘கைதி 2’ ஆகிய படங்களில் கவனம் செலுத்த உள்ளார். இதனிடையே, மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கவும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதனை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இதற்கான கதையை கார்த்தியிடம் சொல்லி சம்மதம் வாங்கிவிட்டார் மாரி செல்வராஜ்.

மாரி செல்வராஜின் தந்தை வாழ்க்கையில் நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. கண்டிப்பாக மாரி செல்வராஜின் முந்தைய படங்கள் போலவே இந்தக் கதையும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்கிறார்கள். தான் இயக்கி வரும் படங்களின் பணிகளை முடித்துவிட்டு, இதற்கான திரைக்கதையை உருவாக்க உள்ளார் மாரி செல்வராஜ். கார்த்தி - மாரி செல்வராஜ் இணையும் படத்தின் படப்பிடிப்பு 2026-ல் தான் தொடங்க வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.

Share this story