படப்பிடிப்பிற்காக காஷ்மீர் செல்லும் கார்த்தி... ‘ஜப்பான்’ புதிய அப்டேட்

japan

கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் ‘ஜப்பான்’ படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. 

இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி வரும் நடிகர் கார்த்தி, வித்தியாசமான கதைக்களத்தில் நடித்து வரும் திரைப்படம் ‘ஜப்பான்‘. இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக அனு இமானுவேல் நடித்து வருகிறார். இவர்களுடன் இயக்குனர் விஜய் மில்டன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.   

japan

ஜோக்கர், ஜிப்ஸி, குக்கூ ஆகிய படங்களை இயக்கிய ராஜூ முருகன் இப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார். பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.  தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளில் தயாராகி வரும் இப்படம் வரும் தீபாவளிக்கு வெளியாக உள்ளது. ‌ 

இப்படத்தின் படப்பிடிப்பு பல கட்டங்களாக நடைபெற்று வந்தது. சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்று தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தில் ஒரு பாடல் காட்சி மட்டும் படமாக்காமல் இருந்து வந்தது. இதையடுத்து இந்த பாடலை படமாக்க கார்த்தி உள்ளிட்ட படக்குழுவினர் காஷ்மீர் செல்லவுள்ளார். அங்கு 8 நாட்கள் பாடல் ஒன்றை படமாக்கவுள்ளனர். 

 

Share this story