கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்கும் 16 வது படத்தின் அப்டேட்

karthik subburaj

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களுள் ஒருவர் கார்த்திக் சுப்புராஜ். இவர் கடந்த ஆண்டு இயக்கிய ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று மிகப்பெரிய வெற்றிப் பெற்றது. தற்பொழுது சூர்யாவின் 45 திரைப்படமான ரெட்ரோ திரைப்படத்தை இயக்கியுள்ளார். திரைப்படம் வரும் மே மாதம் 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது. கார்த்திக் சுப்புராஜ் ஸ்டோன் பென்ச் என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் வைத்துள்ளார். அதன்கீழ் பல திரைப்படங்களையும் வெப் தொடர்களையும் தயாரித்து வருகிறார். வைபவ் மற்றும் பிரியா பவானி ஷங்கர் இணைந்து நடித்த மேயாத மான் திரைப்படத்தை இவர் முதலில் தயாரித்த திரைப்படமாகும். தற்பொழுது அவர் இயக்கியுள்ள ரெட்ரோ திரைப்படத்தையும் ஸ்டோன் பென்ச் நிறுவனம் தயாரித்துள்ளது.

karthik subburaj
ஸ்டோன் பென்ச் நிறுவனம் இதுவரை 15 திரைப்படம் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது அவர்கள் தயாரிக்கும் 16- வது திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். படத்தின் டைட்டில்-ஐ நாளை வெளியாகவுள்ளது. இப்படத்தில் வைபவ் மற்றும் அவரது சகோதரர் சுனில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இதில் அவர்கள் சவப்பெட்டியை தூக்கிக்கொண்டு நடனம் ஆடுவது போல் காட்சி அமைந்துள்ளது. இப்படம் ஒரு சாவை மையப்படுத்தி இருக்கு என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Share this story