கார்த்திக் சுப்புராஜ் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரெட்ரோ 2 வது பாடல் அப்டேட்...

surya

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்  பிறந்தநாளை முன்னட்டு  ரெட்ரோ 2 வது பாடல் அப்டேட் வெளியாகி உள்ளது. 

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ், கருணாகரன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ரெட்ரோ’. 2டி நிறுவனம் மற்றும் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் இணைந்து இதனை தயாரித்துள்ளது. தற்போது இதன் இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.  

 



மே 1-ம் தேதி வெளியாகவுள்ள  ‘ரெட்ரோ’ படத்தின் டீஸர் மற்றும் கண்ணாடி பூவே என்ற பாடலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. 'ரெட்ரோ' படத்தின் இரண்டாம் பாடல் விரைவில் வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்  பிறந்தநாளை முன்னட்டு  ரெட்ரோ படக்குழு சிறப்பு வீடியோ வெளியிட்டு வாழ்த்து தெரிவித்தது. இதையடுத்து இப்படத்தின் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தனது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்து “எதாவது அப்டேட் இருக்கா” எனக் குறிப்பிட்டிருந்தார்.  


இதனையடுத்து, தற்போது  'கனிமா' என தொடங்கும் 2 வது பாடல்  வரும் 21ஆம் தேதி வெளியாகும் என கார்த்திக் சுப்புராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் ஒரு புது போஸ்டரையும் பகிர்ந்துள்ளார். 

Share this story