கார்த்திக் சுப்பராஜ் தயாரிப்பில் உருவான 'பெருசு' படத்தின் ரிலீஸ் அப்டேட்...!

கார்த்திக் சுப்பரா தயாரிப்பில் வைபவ் நடித்துள்ள 'பெருசு' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், பீட்சா படத்தை இயக்கியதன் மூலம் ரசிகர்களால் அறியப்படுபவர். அதைத் தொடர்ந்து இவர் ஜிகர்தண்டா, பேட்ட, ஜிகர்தண்டா டபுள் எகஸ் போன்ற பல வெற்றி படங்களை கொடுத்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். தற்போது இவரது இயக்கத்தில் 'ரெட்ரோ' எனும் திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் சூர்யா கதாநாயகனாக நடிக்க பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படமானது மே 1-ம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இயக்குனராக மட்டுமில்லாமல் தனது ஸ்டோன்பென்ச் நிறுவனத்தின் மூலம் பல படங்களையும் கார்த்திக் சுப்புராஜ் தயாரித்து வருகிறார். அதன்படி, மேயாத மான், மெர்குரி, பென்குயின் உள்ளிட்ட படங்களை கார்த்திக் சுப்புராஜ் தயாரித்திருந்தார்.
Beleive us when we say that the problem is #Perusu #Pedha and outrightly a BIG one for everyone to see 👀
— Stone Bench (@stonebenchers) January 13, 2025
A #FunFamilyFuneral Film 🕺
Thank you @Dir_Lokesh for unveiling the title ❤️@actor_vaibhav @sunilreddy22 @ilango_ram15 @kaarthekeyens #HarmanBaweja #HiranyaPerera… pic.twitter.com/epRBEbwPrL
இதனையடுத்து, அவர் தயாரிக்கும் 16- வது திரைப்படத்தில் வைபவ் மற்றும் அவரது சகோதரர் சுனில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். 'பெருசு' என்று பெயர் வைக்கப்பட்டுள்ள இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் அவர்கள் சவப்பெட்டியை தூக்கிக்கொண்டு நடனம் ஆடுவது போல் காட்சி அமைந்துள்ளது. இறுதிச் சடங்கு சம்பந்தமான கதைக்களத்தில் காமெடி கலந்த குடும்ப பொழுதுபோக்கு படமாக உருவாகிறது.
PERUSU - The Tease…
— Stone Bench (@stonebenchers) February 26, 2025
After Death at a Funeral, here comes Fun 😂 at a Funeral! ⚰️#Perusu Panna Periya Problem !
What’s with all the staring? Keep staring to know more!
In theatres from March 14th!@actor_vaibhav @sunilreddy22 @ilango_ram15 @kaarthekeyens #HarmanBaweja… pic.twitter.com/7lgGCYjyYt
இந்த நிலையில் தற்போது இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இப்படம் வருகிற மார்ச் மாதம் 14-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இது குறித்து அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் புரோமோ வீடியோ வெளியிட்டு தெரிவித்துள்ளது.