ரகசிய நிச்சயதார்த்தம் செய்து கொண்ட கார்த்திகா?

ரகசிய நிச்சயதார்த்தம் செய்து கொண்ட கார்த்திகா?

1980-களில் கோலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ராதா. தமிழில் ரஜினி, கமல், சிவக்குமார், சிவாஜி என பிரபல நடிகர்கள் அனைவருடனும் அவர் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். தமிழ் மட்டுமன்றி தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளிலும் அவர் நடித்துள்ளார். அவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். மூத்த மகள் கார்த்திகா, இரண்டாவது மகள் துளசி. இதில் மூத்த பெண் கார்த்திகா, கோ படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் கோலிவுட்டுக்கு அறிமுகமானார். தொடர்ந்து, பாரதிராஜா இயக்கிய படத்தில் நடித்த அவர் திடீரென சினிமாவை விட்டு விலகினார். இதைத் தொடர்ந்து அவர் தந்தையின் தொழிலில் ஆர்வம் காட்டி வந்தார். 

ரகசிய நிச்சயதார்த்தம் செய்து கொண்ட கார்த்திகா?

தற்போது அவர் கையில் மோதிரத்துடன் ஒருவருடன் இணைந்து எடுத்துள்ள புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். இது சமூக வலைதளங்களில் வேகமாக டிரெண்டாகி வருகிறது. இதனால், கார்த்திகா குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருக்கமான நண்பர்கள் முன்னிலையில் மட்டும் ரகசிய நிச்சயதார்த்தம் செய்துகொண்டாரா என நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர். இருப்பினும், விரைவில் தனது வருங்கால கணவர் குறித்து அவர் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 

Share this story