கார்த்தி நடிக்கும் 26-வது படத்திற்கு வா வாத்தியாரே என தலைப்பு

கார்த்தி நடிக்கும் 26-வது படத்திற்கு வா வாத்தியாரே என தலைப்பு

‘சூது கவ்வும்’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர்  நலன் குமாரசாமி. இந்த படத்தில் விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, அசோக் செல்வன் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர்‌. தமிழில் வெளியான முதல் டார்க் காமெடி படமாக உருவான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து மீண்டும் விஜய் சேதுபதியை வைத்து அவர் இயக்கிய 'காதலும் கடந்து போகும்' படமும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் புதிய படம் ஒன்றை நலன் குமாரசாமி இயக்கவுள்ளார்‌. இந்த படத்தில் நடிகர் கார்த்தி கதாநாயகனாக நடிக்கிறார். ஸ்டுடியோ கிரீன் சார்பில் ஞானவேல்ராஜா தயாரிக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க உள்ளார். கிருத்தி ஷெட்டி நாயகியாக நடிக்கிறார். 

கார்த்தி நடிக்கும் 26-வது படத்திற்கு வா வாத்தியாரே என தலைப்பு
அண்மையில் இந்த படத்தில் சத்யராஜ் மற்றும் ராஜ்கிரன் உள்ளிட்ட ஒரு முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருவதாக செய்திகள் வெளியானது. இந்நிலையில் ‘வா வாத்தியாரே’ என்பது இந்த படத்தின் தலைப்பு என தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் படத்தின் முதல் தோற்றம் வெளியாகும் என்று கூறப்படுகிறது. 
 

Share this story