கார்த்தி நடிப்பில் விரைவில் உருவாகும் தீரன் அதிகாரம் 2?

கார்த்தி நடிப்பில் விரைவில் உருவாகும் தீரன் அதிகாரம் 2?

கார்த்தியை வைத்து தீரன் அதிகாரம் இரண்டாம் பாகத்தை எச்.வினோத் இயக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

எச்.வினோத் இயக்கத்தில் கார்த்தியின் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டடித்த திரைப்படம் தான் ‘தீரன் அதிகாரம் ஒன்று’. இந்த படத்தில் கார்த்தி, ரகுல் ப்ரீத் சிங், அபிமன்யு சிங் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்த இந்த படம் கடந்த நவம்பர் 17-ஆம் தேதி 2017 அன்று வெளியானது. 

கார்த்தி நடிப்பில் விரைவில் உருவாகும் தீரன் அதிகாரம் 2?

ஆபரேஷன் பவேரியா வழக்கின் உண்மையான நிகழ்வுகளை அடிப்படையாக வைத்து இப்படம் உருவானது. வெளி மாநிலத்திலிருந்து வரும் கொள்ளையர்கள் எப்படி தமிழகத்தில் கொள்ளையடிக்கிறார்கள் என்பது இப்படம். இந்த படத்தின் திரைக்கதையை சிறப்பான அமைந்திருந்த இயக்குனர் எச் வினோத்திற்கு பாராட்டுக்கள் குவிந்தன. பிலிம் பேர் உள்ளிட்ட பல விருதுகளும் குவிந்தது. 

இந்நிலையில், இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கார்த்தியை வைத்தே இப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க எச்.வினோத் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Share this story