கார்த்தியின் ‘சர்தார் 2’ டீசர் விரைவில் ரிலீஸ்!
கார்த்தி நடித்து வரும் ‘சர்தார் 2’ படத்தின் டீசர் விரைவில் வெளியாகவுள்ளது. பிரேம்குமார் இயக்கத்தில் கார்த்தி, அரவிந்த்சாமி நடித்துள்ள ‘மெய்யழகன்’ படம் செப்டம்பர் 27-ம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படத்தின் டீசருக்கு இணையத்தில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இன்னும் சில நாட்களில் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவை சென்னையில் நடத்த திட்டமிட்டுள்ளது படக்குழு. 2டி நிறுவனம் இந்தப் படத்தினை தயாரித்திருக்கிறது. ‘மெய்யழகன்’ படத்தைத் தொடர்ந்து, மித்ரன் இயக்கத்தில் உருவாகும் ‘சர்தார் 2’ படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் கார்த்தி.
‘சர்தார் 2’ படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதலில் நடந்த படப்பிடிப்பில் உள்ள காட்சிகளை வைத்து படத்தின் அறிமுக டீஸரை வெளியிடவுள்ளது படக்குழு. இதற்காக 3 நிமிடங்கள் ஓடக்கூடிய டீசரை தணிக்கை செய்திருக்கிறது படக்குழு. ‘மெய்யழகன்’ படத்துடன் ‘சர்தார் 2’ டீசரை இணைக்கவும் முடிவு செய்திருக்கிறார்கள். அறிமுக டீசரில் உள்ள காட்சிகள் படத்திலும் இடம்பெற இருப்பது குறிப்பிடத்தக்கது.