கார்த்தியின் 'சர்தார் 2' டீசர் விரைவில்...

sardhar 2

நடிகர் கார்த்தி நடித்துள்ள 'தார்சர் 2' டீசர் விரைவில் வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது.  

நடிகர் கார்த்தி மற்றும் இயக்குநர் பி.எஸ். மித்ரன் கூட்டணியில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற திரைப்படம் ’சர்தார். இந்தப் படத்தின் வெளியீட்டின் போதே இதன் இரண்டாம் பாகம் உருவாகும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. சர்தார் திரைப்படம் வெற்றி பெற்றதை அடுத்து, இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் வேக வேகமாக உருவானது.


அதன்படி, சர்தார் 2 படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்ற நிலையில், படத்திற்கான பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன. இது குறித்து படக்குழு வெளியிட்ட தகவல்களில் சர்தார் 2 படத்திற்கான டப்பிங் பூஜையுடன் தொடங்கியதாக அறிவித்து இருந்தது. இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் சர்தார் 2 படத்தின் டீசர் உருவாகிவிட்டதாகவும், இதற்கு சென்சார் பெறும் பணிகளும் முழுமை பெற்றதாக கூறப்படுகிறது. அதன்படி விரைவில் 2.54 நிமிடங்கள் ஓடும் டீசர் வெளியிடப்படலாம் என்று தெரிகிறது.sardar 2

முன்னதாக சர்தார் 2 பட்த்திற்கான சண்டைக் காட்சியை படமாக்கும் போது, நடிகர் கார்த்தி விபத்தில் சிக்கினார். இதனால் காயமுற்ற நடிகர் கார்த்தி மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொண்டார். சர்தார் 2 படத்தில் நடிகர் எஸ்.ஜே. சூர்யா, மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத், ரஜிஷா விஜயன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
 

Share this story

News Hub