கார்த்தியின் 'வா வாத்தியார்' டீசர் இன்று மாலை ரிலீஸ்...!

karthi

நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் “வா வாத்தியார்” படத்தின் டீஸர் இன்று (13-11-2024) மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளது.மெய்யழகன் படத்துக்குப் பிறகு நடிகர் கார்த்தி நலன் குமாரசாமி இயக்கத்தில் ’வா வாத்தியார்’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் சத்யராஜ், ராஜ்கிரண் மற்றும் க்ரீத்தி ஷெட்டி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.  சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். படத்தின் ஷூட்டிங் நீண்டகாலமாக நடந்த நிலையில் தற்போது நிறைவடைந்துள்ளது.


இந்நிலையில் வா வாத்தியார் படத்தின் டீசர் சூர்யாவின் கங்குவா படத்தோடு திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கங்குவா படத்திலும் கார்த்தி ஒரு சிறப்புத்​ தோற்றத்தில் நடித்துள்ளதாக கூறப்படுவதால் கார்த்தி ரசிகர்களுக்கு நவம்பர் 14 ஆம் தேதி டபுள் ட்ரீட்டாக அமையவுள்ளது.அதை உறுதிப் படுத்துவது போல ‘வா வாத்தியார்’ பட டீசர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் அறிவித்துள்ளது.  ஏற்கனவே கங்குவா படத்தில் கார்த்தி ஒரு சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார் என்ற செய்தி பரவி சூர்யா மற்றும் கார்த்தி ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்டாக அமைந்துள்ளது.

Share this story