உருக வைக்கும் ‘மேகங்கள்’ பாடல்.. ‘கருமேகங்கள் கலைகின்றன’ லிரிக்கல் பாடல் வெளியீடு !

‘கருமேகங்கள் கலைகின்றன’ படத்திலிருந்து மேகங்கள் என்ற லிரிக்கல் பாடல் வெளியாகியுள்ளது.
யதார்த்த வாழ்வியலை படமாக்கி வரும் தங்கர் பச்சானின் அடுத்த படைப்பாக உருவாகி வருகிறது ‘கருமேகங்கள் கலைகின்றன’. இந்த படத்தில் இயக்குனர்கள் பாரதிராஜா, கெளதம் மேனன், யோகிபாபு, அதிதி மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
விஏயு மீடியா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து வருகிறது. என்.கே.ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு பி.லெனின் படத்தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார். இந்த படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் கும்பகோணம் பகுதியில் நடைபெற்றுள்ளது.
ஜிவி பிரகாஷ் இசையில் பாடல்கள் உருவாகியுள்ளது. இந்நிலையில் இப்படத்தில் மேகங்கள் என்ற லிரிக்கல் பாடல் வெளியாகியுள்ளது. கவிஞர் வைரமுத்து வரிகளில் உருவாகியுள்ள இந்த பாடலை சைந்தவி பாடியுள்ளார். உருக வைக்கும் இந்த பாடல் ரசிகர்களின் கவனம் ஈர்த்துள்ளது.