தங்கர் பச்சானின் ‘கருமேகங்கள் கலைக்கின்றன’.... ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட கமலஹாசன் !

KarumegangalKalaiginrana

தங்கர் பச்சானின் ‘கலைமேகங்கள் கலைக்கின்றன’ படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் கமலஹாசன் வெளியிட்டுள்ளார்.  

நீண்ட இடைவெளிக்கு பிறகு தங்கர் பச்சான் இயக்கத்தில் ‘கருமேகங்கள் கலைகின்றன’ என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் இயக்குனர்கள் பாரதிராஜா, கெளதம் மேனன், யோகிபாபு, அதிதி மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

விஏயு மீடியா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து வருகிறது. என்.கே.ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு பி.லெனின் படத்தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார். சமூகத்தில் நடக்கும் யதார்த்தமான விஷயங்களை இப்படத்தின் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது. 

KarumegangalKalaiginrana

வைரமுத்துவின் வரிகளில் பாடல்கள் உருவாகியுள்ள நிலையில் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். தற்போது இப்படத்தின் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த போஸ்டரை உலகநாயகன் கமலஹாசன் இன்று வெளியிட்டார். இந்த போஸ்டர் வரவேற்பை பெற்றது.  

Share this story