ராஜா சாருக்கு ‘அழகி’.. எனக்கு ‘கருமேகங்கள் கலைகின்றன’ - ஜிவி பிரகாஷ் நெகிழ்ச்சி !

KarumegangalKalaiginrana

இளையராஜாவிற்கு ‘அழகி’ மாதிரி, எனக்கு கலைமேகங்கள் கலைகின்றன என்று இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார். 

தனித்துவமான இயக்குனரான தங்கர் பச்சான் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘கருமேகங்கள் கலைகின்றன’. இந்த படத்தில் இயக்குனர்கள் பாரதிராஜா, கெளதம் மேனன், யோகிபாபு, அதிதி மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். விஏயு மீடியா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து வருகிறது. 

KarumegangalKalaiginrana

என்.கே.ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு பி.லெனின் படத்தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார். யதார்த்த வாழ்வியலை வைத்து இப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் கும்பகோணம் பகுதியில் நடைபெற்றுள்ளது. வரும் மார்ச் மாதம் வெளியிட திட்டமிட்டுள்ள இந்த படத்தின் தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

வைரமுத்து எழுதியுள்ள இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்நிலையில் இப்படத்தின் பாடல்கள் குறித்து நெகிழ்ச்சி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் இந்த படத்திற்காக 5 பாடல்கள் தயாராகியுள்ளன. இந்த பாடல்களை கேட்டு தங்கர்‌ பச்சான் வியந்துள்ளார். மேலும் 'அழகி' படத்தை பார்த்து வியந்திருக்கிறேன். நம்ம இசைக்கு இப்படியொரு வாழ்வியல் படம் கிடைக்காதா என்று ஏங்கியதுண்டு. அது 'கருமேகங்கள் கலைகின்றன' மூலம் நிறைவேறியுள்ளது என்று கூறினார். 

 

Share this story