சவாலான கேரக்டரில் நடித்துள்ளார் கருணாஸ் -எந்த படம் தெரியுமா ?
தமிழ் திரையுலகில் நடிக்க வந்து 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள கருணாஸ், தேசிய விருது பெற்ற இயக்குனர் சஜீவ் பாழூரின் எழுத்து மற்றும் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘என்ன விலை’ என்ற படத்தில் சவாலான கேரக்டரில் நடித்துள்ளார். ராமேஸ்வரம் அருகே கடலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் நாணயங்களை மீட்டெடுக்கும் நாணய மீட்பாளரான தவசிமுத்து கேரக்டரில் கருணாஸ் நடித்துள்ளார். இப்படம் குறித்து கருணாஸ் கூறுகையில், ‘தவசிமுத்து கேரக்டர் என்னிடம் முற்றிலும் மாறுபட்ட அணுகுமுறையை எதிர்பார்த்தது. வாழ்க்கையும், வாழ்வாதாரமும் கடலுடன் மிகவும் நெருக்கமாக பின்னிப் பிணைந்திருக்கின்றன.
அவன் எதிர்கொள்ளும் சூழ்நிலைகள் படிப்படியாக அவனை மிகப்பெரிய போராட்டத்துக்குள் அழைத்து செல்கின்றன. இந்த கேரக்டரை எனக்கு சிறப்பானதாக மாற்றியது, அவன் கடந்து செல்லும் ஒரு உணர்வுப்பூர்வமான பயணம்தான். இப்படம்

