‘காசேதான் கடவுளடா’ - ஜாலியான படம் - இயக்குனர் ஆர்.கண்ணன் !

kasethan kadavulada

‘காசேதான் கடவுளடா’ ஒரு ஜாலியான படம் என்று இயக்குனர் ஆர்.கண்ணன் தெரிவித்துள்ளார். 

 ஆர். கண்ணன் இயக்கத்தில் மிர்ச்சி சிவா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'காசேதான் கடவுளடா'. இந்த படத்தில் ஹீரோயினாக ப்ரியா ஆனந்த் நடித்துள்ளார். இவர்களுடன் யோகி பாபு, கருணாகரன், ஊர்வசி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர். விரைவில் இந்த படம் வெளியாகவுள்ளது.

kasethan kadavulada

 இந்நிலையில் இப்படத்தின் பத்திரிக்கை சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. அதில் பேசிய இயக்குனர் ஆர்.கண்ணன், தற்போதைய சூழ்நிலையில் ஒரு படம் வெளியிடுவது என்பது சாதாரண விஷயம் இல்லை. இந்த படம் வெளியாவதற்கு பல பேர் ஆதரவு கிடைத்தது. அவர்கள் அனைவருக்கும் நன்றி. 

kasethan kadavulada

மிர்ச்சி சிவா எனது நீண்ட கால நண்பர். அவர் தான் இந்த படத்தின் ஹீரோ. அவருடன் இணைந்து பல படங்களில் பணியாற்றி வருகிறேன். உள்ளத்தை அள்ளித்தா, பம்மல் கே சம்மந்தம் போன்று இந்த படமும் ஒரு ஜாலியான படம். இந்த படத்தில் நடித்த நடிகர், நடிகைகள் மற்றும் தொழிற்நுட்ப கலைஞர்களுக்கு நன்றி என்று தெரிவித்தார். 

 

Share this story