காமெடியில் மிரட்ட வரும் மிர்ச்சி சிவா... 'காசேதான் கடவுளடா' புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு !

kasethan kadavulada movie release date announced

மிர்ச்சி சிவா நடிப்பில் உருவாகியுள்ள 'காசேதான் கடவுளடா' படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 

காமெடி திரைப்படங்களில் நடித்து வரும் மிர்ச்சி சிவா, தற்போது நடித்து முடித்துள்ள திரைப்படம் 'காசேதான் கடவுளடா'. பழம்பெரும் நடிகர் முத்துராமன் நடிப்பில் உருவாகி மாபெரும் வெற்றிப்பெற்ற நகைச்சுவை படத்தின் ரீமேக்காக இப்படம் உருவாகி வருகிறது. 'ஜெயம்கொண்டான்', 'கண்டேன் காதலை' உள்ளிட்ட வெற்றிப்படங்களை இயக்கிய ஆர்.கண்ணன் இப்படத்தை இயக்கியுள்ளார். 

kasethan kadavulada movie release date announced

இந்த படத்தில் ஹீரோயினாக ப்ரியா ஆனந்த் நடித்துள்ளார். இவர்களுடன் யோகி பாபு, கருணாகரன், ஊர்வசி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர். ஆர்.கண்ணனின் மசாலா பிக்ஸ் நிறுவனம் மற்றும் எம்கேஆர்பி புரொடக்‌ஷன்ஸ் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றன.

ஏற்கனவே இப்படம் கடந்த அக்டோபர் 7-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தயாரிப்பு பணிகள் நிறைவு பெறாததால் படம் அறிவிக்கப்பட்டபடி வெளியாகவில்லை. இந்நிலையில் இப்படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது‌. அதன்படி இப்படம் வரும் டிசம்பர் 23ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. 

 

Share this story