சிவா நடிப்பில் ‘காசேதான் கடவுளடா’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி வெளியீடு.

photo

கடந்த 1972-ம் ஆண்டு இயக்குனர் சித்ராலயா கோபு இயக்கத்தில், முத்துராமன், தேங்காய் சீனிவாசன், வெண்ணிற ஆடை மூர்த்தி, மனோரமா ஆகியோரது நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் 'காசேதான் கடவுளடா'. தற்போது இந்த படத்தை மீண்டும் அதே பெயரில் ரீமேக் செய்துள்ளனர்.

photo

அகிலஉலக சூப்பர் ஸ்டார் சிவா கதாநாயகனாக நடிக்க, ஆர்.கண்ணன் இந்த படத்தை தயாரித்து, இயக்கியுள்ளார். சிவாவிற்கு ஜோடியாக நடிகை பிரியா ஆனந்த் நடித்துள்ளார். இவர்களோடு இணைந்து ஊர்வசி, கருணாகரன், யோகிபாபு, சிவாங்கி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு பிரசன்னா எஸ் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். ராஜ் பிரதாப் இசையமைத்துள்ளார். படத்தின் ஃபஸ்ட்லுக் போஸ்டர், டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது.

photo

அதாவது ‘காசேதான் கடவுளடா’ திரைப்படம் பிப்ரவரி மாதம் 10ஆம் தேதி வெளியாகும் என அறிவித்து படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு தெரியப்படுத்தியுள்ளனர். இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

photo

Share this story