‘காசேதான் கடவுளடா’... மீண்டும் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு !

kasethan kadavulada

மிர்ச்சி சிவா நடிப்பில் உருவாகியுள்ள ‘காசேதான் கடவுளடா’ படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஆர். கண்ணன் இயக்கத்தில் மிர்ச்சி சிவா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'காசேதான் கடவுளடா'. பழம்பெரும் நடிகர் முத்துராமன் நடிப்பில் உருவாகி மாபெரும் வெற்றிப்பெற்ற நகைச்சுவை படத்தின் ரீமேக்காக இப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் ஹீரோயினாக ப்ரியா ஆனந்த் நடித்துள்ளார்.

kasethan kadavulada

இவர்களுடன் யோகி பாபு, கருணாகரன், ஊர்வசி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர். ஆர்.கண்ணனின் மசாலா பிக்ஸ் நிறுவனம் மற்றும் எம்கேஆர்பி புரொடக்‌ஷன்ஸ் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றன.

கடந்த ஆண்டே ரிலீசுக்கு தயாரான இப்படம் பலமுறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு இன்னும் வெளியாகாமல் கிடக்கிறது. இந்நிலையில் தமிழ் புத்தாண்டையொட்டி புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த படம் வரும் மே 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த முறையாவது சொன்னபடி வெளியாகுமா என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். . 

Share this story