மண் வாசனை வீசும் ‘கறிக்குழம்பு வாசம்’ பாடல்.. ஆர்யா படத்தின் லிரிக்கல் வீடியோ பாடல் வெளியீடு !

KatharbashaEndraMuthuramalingam

ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள 'காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்' படத்தின் ‘கறிக்குழம்பு வாசம்’ பாடல் வெளியாகியுள்ளது. 

ஆர்யா மற்றும் முத்தையா கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம்  'காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்’. இந்த படத்தில் கதாநாயகியாக சித்தி இத்னானி நடித்துள்ளார். இவர்களுடன் பிரபு, பாக்யாராஜ், சிங்கம்புலி, நரேன், தமிழ், மதுசூதன ராவ், அவினாஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

KatharbashaEndraMuthuramalingam

நீண்ட இடைவெளிக்கு பிறகு கிராமத்து கதைக்களத்தில் உருவாகும் படத்தில் நடித்துள்ளார். ஆர்யாவின் 34வது படமாக உருவாகும் இப்படத்தை ட்ரம்ஸ்டிக் நிறுவனம் மற்றும் ஜி ஸ்டுடியோ இணைந்து தயாரித்து வருகிறது. வழக்கமாக காதல் ரொமான்ஸ் படங்களில் நடிக்கும் ஆர்யா இந்த படத்தில் முழுக்க முழுக்க கிராமத்து இளைஞனாக நடித்துள்ளார். 

KatharbashaEndraMuthuramalingam

இந்த படத்தை ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகும் இந்த படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படம் வரும் ஜூன் 2-ஆம் தேதி திரையரங்கில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி இப்படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகி வருகிறது. அந்த வகையில் இப்படத்தின் ‘கறிக்குழம்பு வாசம்’ வாசம் என்ற லிரிக்கல் பாடல் வெளியிடப்பட்டுள்ளது. மண் வாசம் வீசம் இப்பாடலை ஜிவி பிரகாஷ் இசையமைத்து பாடியுள்ளார். இந்த பாடல் வரவேற்பை பெற்றுள்ளது.  

Share this story