ஆர்யா நடிப்பில் ‘காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்’... ஸ்னீக் பீக் காட்சி வெளியீடு !

KatharbashaEndraMuthuramalingam
 ஆர்யாவின் நடிப்பில் உருவாகியுள்ள ‘காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ படத்தின் ஸ்னீக் பீக் காட்சி வெளியிடப்பட்டுள்ளது. 

காதல் மற்றும் ரொமான்ஸ் திரைப்படங்களில் நடித்து வரும் ஆர்யா,  முத்தையா இயக்கத்தில் கிராமத்து கதைக்களத்தில் நடித்துள்ள திரைப்படம்  'காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்’. ஆர்யாவின் 34வது படமாக உருவாகியுள்ள இப்படத்தை ட்ரம்ஸ்டிக் நிறுவனம் மற்றும் ஜி ஸ்டுடியோ இணைந்து தயாரித்துள்ளது. 

Katharbasha Endra Muthuramalingam Sneak Peek

இந்த படத்தில் கதாநாயகியாக சித்தி இத்னானி நடித்துள்ளார். இவர்களுடன் பிரபு, பாக்யாராஜ், சிங்கம்புலி, நரேன், தமிழ், மதுசூதன ராவ், அவினாஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தை ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். 

Katharbasha Endra Muthuramalingam Sneak Peek

கடந்த ஜூன் 3-ஆம் தேதி வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் ஸ்னீக் பீக் காட்சி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த காட்சி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

Share this story