அசால்ட் செய்யும் ஆர்யா... 'டவுளத்தான ரெளடி' பாடல் வெளியீடு !
ஆர்யாவின் 'காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் வெளியிடப்பட்டுள்ளது.
'விருமன்' படத்திற்கு பிறகு முத்தையா இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'காதர்பாட்சா' என்ற முத்துராமலிங்கம்'. வழக்கமாக காதல் ரொமான்ஸ் படங்களில் நடிக்கும் ஆர்யா இந்த படத்தில் முழுக்க முழுக்க கிராமத்து இளைஞனாக நடித்துள்ளார். முழுக்க முழுக்க கிராமத்து கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆர்யாவின் 34வது படமாக உருவாகும் இந்த படத்தை ட்ரம்ஸ்டிக் நிறுவனம் மற்றும் ஜி ஸ்டுடியோ இணைந்து தயாரித்து வருகிறது. இந்த படத்தில் கதாநாயகியாக சித்தி இத்னானி நடித்து வருகிறார். ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகும் இந்த படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியான நிலையில் தற்போது இப்படத்தின் தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் வெளியிடப்பட்டுள்ளது. டவுளத்தான ரெளடி என தொடங்கும் இந்த பாடல் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
Here it is our #DowlathanaRowdy First Single from #KEMTheMovie 🥁💥
— Drumsticks Productions (@DrumsticksProd) April 13, 2023
▶️ https://t.co/xYLniWxdEB
✒️ #KanchanaLogan & #JuniorNithya
🎙️@gvprakash & KanchanaLogan
#KatharBashaEndraMuthuramalingam @arya_offl @dir_muthaiya @SiddhiIdnani @gvprakash @VelrajR @zeestudiossouth pic.twitter.com/4YLTlmuCBZ