'டவுளத்தான ரவுடி'... ஆர்யா படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட் !

arya

 ஆர்யா நடிப்பில் உருவாகி வரும் 'காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட் வெளியாகியுள்ளது. 

 ‘விருமன்’ படத்தின் வெற்றிக்கு பிறகு ஆர்யாவை வைத்து இயக்குனர் முத்தையா புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார். ‘காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ தலைப்பில் உருவாகும் இந்த படத்தில் ஆர்யா கிராமத்து கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். டெடி, கேப்டன் ஆகிய படங்கள் ஆர்யாவிற்கு பெரிய வெற்றியை தராததால் இந்த படம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

arya

ஆர்யாவின் 34வது படமாக உருவாகும் இந்த படத்தில் கதாநாயகியாக சித்தி இத்னானி நடித்து வருகிறார். ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகும் இந்த படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்து வருகிறார். கிராமத்து கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்தை ட்ரம்ஸ்டிக் நிறுவனம் மற்றும் ஜி ஸ்டுடியோ இணைந்து தயாரித்து வருகிறது. 

சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் விரைவில் வெளியாக உள்ள இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி 'டவுளதான ரவுடி' என தொடங்கும் இந்த பாடல் வரும் ஏப்ரல் 13-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

Share this story