வெளியீட்டுக்கு தயாரான கதிரின் ‘யூகி’.. ரிலீஸ் குறித்து முக்கிய அறிவிப்பு !

yugi

 கதிர் நடிப்பில் உருவாகும் ‘யூகி’ படத்தின் ரிலீஸ் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

அறிமுக இயக்குனர் ஜாக் ஹாரிஸ் இயக்கத்தில் கதிர் நடிப்பில் உருவாகும் திரைப்படம் ‘யூகி’.  இந்த படத்தில் கதிருக்கு ஜோடியாக கயல் ஆனந்தி நடித்துள்ளார். இவர்களுடன் நட்ராஜ் மற்றும் நரேன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

yugi

தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளில் உருவாகும் இப்படத்திற்கு மலையாள இசையமைப்பாளர் ரஞ்சின் ராஜ் இசையமைத்துள்ளார். இப்படத்தில் கதிர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட போலீஸ் அதிகாரியாகவும், வில்லன் கதாபாத்திரத்தில் நடிகர் நட்ராஜும் நடிப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.  

கதிருடன் இணைந்து இந்த படத்தில் ‘குக் வித் கோமாளி’ பவித்ரா லக்ஷ்மி, நடிகை ஆத்மியா, வினோதினி, ஜான் விஜய் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.  இந்த படத்தின் வெளியீட்டு உரிமையை 11_11 சினிமா நிறுவனம்‌ பெற்றுள்ளது. இந்நிலையில் இப்படம் நவம்பர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் தேதியும் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Share this story