‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ கிடைத்த வரவேற்பு.. க்யூட் வீடியோவை வெளியிட்ட சமந்தா !
‘காத்துவாக்குல ரெண்ட காதல்’ படத்திற்கு கிடைத்த வரவேற்பையடுத்து ரசிகர்களுக்கு நடிகை சமந்தா நன்றி தெரிவித்துள்ளார்.
‘நானும் ரௌடிதான்’ படத்திற்கு பிறகு விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா இணைந்து நடித்துள்ள திரைப்படம் காத்துவாக்குல ‘ரெண்டு காதல்’. இந்த விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா கூட்டணியில் நடிகை சமந்தாவும் இணைந்து நடித்துள்ளார். விக்னேஷ் இயக்கத்தில் இந்த படம் உருவாகியுள்ளது.

காதல் மற்றும் காமெடி கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ஒரு கதாநாயகன் இரண்டு பெண்கள் மீது காதல் வசப்படுகிறான். இதனால் அவன் வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்பதுதான் இந்த படத்தின் கதை. இதில் விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தாவின் நடிப்பு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்நிலையில் இந்த படம் வெற்றி குறித்து நடிகை சமந்தா, க்யூட் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்திற்கு ரசிகர்கள் கொடுத்த வரவேற்புக்கு நன்றி. அனைவரும் இந்த படத்தை பார்த்து மகிழ்ந்துள்ளனர். நீங்கள் கொடுத்த வரவேற்பு, மேசேஜ், ட்வீட், வாழ்த்துக்கள் என அனைத்திற்கும் நன்றி என்று சமந்தா தெரிவித்துள்ளார்.
♥️ from Kashmir #KaathuvaakulaRenduKaadhal pic.twitter.com/ty3bxJ8Gpq
— Samantha (@Samanthaprabhu2) April 30, 2022

