நடிகர் விஜய் சேதுபதி வயதை கூகுளில் தேடிய கத்ரினா கைஃப்

நடிகர் விஜய் சேதுபதி வயதை கூகுளில் தேடிய கத்ரினா கைஃப்

நடிகர் விஜய் சேதுபதி மற்றும் கத்ரினா கைஃப் இணைந்து நடித்துள்ள படம் ‘மெரி கிறிஸ்துமஸ்’. இந்த படத்தை ‘அந்தாதுன்’ பட இயக்குநரான ஸ்ரீராம் ராகவன் இயக்கியுள்ளார். இந்தப்படத்தில் ராதா சரத்குமார், சஞ்சய் கபூர், தினு ஆனந்த் ஆகியோர் நடித்துள்ளனர்.  ‘மெரி கிறிஸ்துமஸ்’ படம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் சில பல காரணங்களால் வெளியீடு தள்ளிப்போனது.  அதன் பின்னர் டிசம்பர் 15, டிசம்பர் 8 என மாற்றப்பட்ட நிலையில் தற்போது படம் அடுத்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு வெளியாகும் என தெரிகிறது. இறுதியாக ஒருவழியாக படம் ஜனவரி மாதம் 12ஆம் தேதி படம் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளனர். 

நடிகர் விஜய் சேதுபதி வயதை கூகுளில் தேடிய கத்ரினா கைஃப்

இந்நிலையில், இப்படத்தில் பணியாற்றிய அனுபவம் குறித்து கத்ரினா பேசுகையில், விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்தது நல்ல அனுபவம். அவரை சில சமயம் சார் என கூப்பிடுவேன். பல சமயம் பெயர் சொல்லி கூப்பிடுவேன். இதற்காக எங்களுக்குள் விவாதமே நடந்தது. பின்பு ஒரு முடிவு எடுத்து அவரது வதயை கூகுள் செய்து பார்த்தேன் என கூறியுள்ளார். 
 

Share this story