விரைவில் விஷ்ணு விஷால் படத்தின் அடுத்த பாகம் -எந்த படம் தெரியுமா ?
1780626628000
கடந்த 2022ம் ஆண்டு செல்லா அய்யாவு இயக்கத்தில் விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி உள்பட பலரது நடிப்பில் வெளியான படம் ‘கட்டா குஸ்தி’. மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற இப்படத்தின் 2ம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்ட இதன் படப்பிடிப்பு ஒரே கட்டமாக முடிக்க படக்குழுவினர் திட்டமிட்டனர்.
அதன்படி தற்போது படப்பிடிப்பு முடிவடைந்து, இறுதி கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ‘கட்டா குஸ்தி 2’ படத்தின் மேக்கிங் வீடியோவை வெளியிட்ட படக்குழு வரும் ஜூலை 3ம் தேதி படம் திரைக்கு வரும் எனவும் அறிவித்தது. விஷ்ணு விஷால் தயாரித்து ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில் ஐஸ்வர்யா லட்சுமி, ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, கருணாஸ், முனீஷ்காந்த் ஆகியோர் நடித்துள்ளனர்.