சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கும் கட்டா குஸ்தி 2-பட விமர்சனம்

kutta kusthi

கடந்த 2022ல் செல்லா அய்யாவு இயக்கத்தில் விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில் வெளியான ‘கட்டா குஸ்தி’ படத்தின் தொடர்ச்சியாக உருவாகியுள்ளது, ‘கட்டா குஸ்தி 2’. ஒரு மகளை பெற்ற மல்யுத்த வீராங்கனை ஐஸ்வர்யா லட்சுமி, டெல்லியில் நடக்கும் போட்டியில் விளையாட தயாராகி வருகிறார். ஐஸ்வர்யா லட்சுமியின் உணவில் போதை மருந்து கலக்கப்படுகிறது. இதனால், அவர் விளையாட தடை போடப்படுகிறது. இதற்கு காரணம் கணவர் விஷ்ணு விஷால் என்றறிந்த ஐஸ்வர்யா லட்சுமி, அவரிடம் விவாகரத்து கேட்டு கோர்ட்டுக்கு செல்கிறார். பிறகு என்ன நடக்கிறது என்பது மீதி கதை.

குடும்பத்தில் கணவன், மனைவியின் பங்கு, பெற்றோரால் பாதிக்கப்படும் குழந்தையின் மனநிலை போன்றவற்றை சிரிக்கவும், சிந்திக்கவும் சொல்லி, கில்லியாக ஜெயித்திருக்கிறார் இயக்குனர் செல்லா அய்யாவு. ஹவுஸ் ஹஸ்பெண்ட் கேரக்டரில் சிறப்பாக நடித்துள்ள விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமியுடனான சில்மிஷத்திலும், கிளாஸ் டீச்சர் மோக்‌ஷாவுடனான ‘அப்படி போடு’ என்ற பாடலுக்கான ஆட்டத்திலும், மகள் மீதான பாசத்திலும் ஜொலிக்கிறார். மல்யுத்த வீராங்கனையாகவே மாறி அசத்தியுள்ள ஐஸ்வர்யா லட்சுமிக்கு பல விருதுகள் கிடைக்கும். கணவன் மீது கோபம், மகள் மீது பாசம், விளையாட்டில் வெறித்தனம் என்று, நவரச நடிப்பில் புகுந்து விளையாடி இருக்கிறார்.

அனைவரையும் தனது சுட்டித்தனமான நடிப்பின் மூலம் வசியப்படுத்தி விடுகிறார், பேபி சாரா ஜியானா. நீதிபதியிடம் அவர் பேசும் வசனம், விவாகரத்து செய்ய நினைக்கும் தம்பதிகளுக்கு சரியான சாட்டையடி

Share this story