"அளவற்ற அன்பால் மகிழ்கிறேன்" - 'காவாலா' வெற்றியால் துள்ளி குதிக்கும் தமன்னா !

kavala

 காவாலா பாடலின் என்னை நெகிழ வைத்துள்ளதாக நடிகை தமன்னா தெரிவித்துள்ளார். 

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் மற்றும் ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகி வருகிறது 'ஜெயிலர்'. ஜெயில் கதைக்களத்தை கொண்ட இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த்,  முத்துவேல் பாண்டியன் என்ற ஓய்வு பெற்ற ஜெயிலர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படம் வரும் ஆகஸ்ட் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

kavala

இதையொட்டி இப்படத்திலிருந்து அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகி வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் இப்படத்திலிருந்து 'காவாலா' என்ற முதல் பாடல் வெளியானது. அனிரூத் இசையில் உருவான அந்த பாடலை அருண்ராஜா காமராஜ் எழுதியுள்ளார் ‌‌ தமன்னாவின் அசத்தலான நடனத்தில் வெளியான அந்த பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

kavala 

சமூக வலைதளத்தில் காவாலா பாடல் டிரெண்டாகி வரும் நிலையில் நடிகை தமன்னா, பாடல் வெற்றிக்கு மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் 'காவாலா' பாடலுக்கு  கிடைத்த அளவற்ற அன்பை என்னால் நம்ப முடியவில்லை. மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.  ‌ எனது பணிக்கு கிடைத்த மிகப்பெரிய மகிழ்ச்சியை கண்டு வியக்கிறன் என்று கூறினார்.


 

Share this story