நாளை வெளியாகும் கவின் படத்தின் தலைப்பு.. ஆர்வத்துடன் காத்திருக்கும் ரசிகர்கள் !

kavin

கவின் - இளன் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் தலைப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

வெள்ளித்திரையில் கவனித்தக்க நடிகராக மாறிவிட்டார் கவின். முன்னணி ஹீரோக்களுக்கு இணையான திரைப்படங்களில் நடித்து வருகிறார். ‘டாடா’ படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு ‘பியார் பிரேம காதல்’, ‘கிரகணம்’ ஆகிய படங்களை இயக்கிய இளன் இயக்கத்தில் தற்போது கவின் நடித்து வருகிறார். 

kavin

இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்தை ரைஸ் ஈஸ்ட் பிரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில் இப்படத்தின் தலைப்பு நாளை மாலை 6 மணிக்கு வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த படத்திற்கு ‘ஸ்டார்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Share this story