கவின், நெல்சன் கூட்டணி.. ப்ளடி பெக்கர் ஃபர்ஸ்ட் சிங்கிள் நான் யார் ரிலீஸ்..

kavin

நெல்சன் இயக்குனர் என்பதை தாண்டி தற்போது தயாரிப்பாளராக புது அவதாரம் எடுத்திருக்கிறார். அவருடைய முதல் முயற்சியில் கவின் நாயகனாக நடிக்கிறார். ப்ளடி பெக்கர் என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் போஸ்டரே வித்தியாசமாக இருந்தது. ஆள் அடையாளம் தெரியாத அளவுக்கு பிச்சைக்கார வேஷத்தில் இருந்தார் கவின். அதை அடுத்து சத்தம் இல்லாமல் விறுவிறுப்பாக நடந்த இதன் படப்பிடிப்பு தற்போது முடிந்துள்ளது. வரும் தீபாவளியை முன்னிட்டு வெளியாக இருக்கும் இப்படத்தின் முதல் சிங்கிள் பாடல் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.. அதன்படி தற்போது வெளிவந்துள்ள பாடல் ஒரு ப்ரோமோ வீடியோவாகும்.

அதன்படி படத்தில் பிச்சைக்காரராக நடிக்கும் கவின் இந்தப் பாடலில் தியேட்டருக்கு சென்று படம் பார்க்கிறார். அங்கு கவின் அந்த காலம் போல் உடை அணிந்து பாடல் பாடுகிறார். அதேபோல் இசையில் ஆரம்பித்து உடை, டான்ஸ் என பாடல் முழுவதும் 70 காலகட்டத்தை தான் ஞாபகப்படுத்துகிறது.  நான் யார் என தொடங்கும் பாடல் முழுவதும் கேட்பதற்கும் பார்ப்பதற்கும் குதூகலமாக இருக்கிறது. ஜென் மார்ட்டின் இசையில் கலகலப்பாக வெளியாகி இருக்கும் இந்த பாடல் ரசிகர்களின் வாழ்த்துக்களோடு ட்ரெண்ட் ஆகி வருகிறது.

Share this story