ஹாய் நான் தனுஷ் பேசுகிறேன்.‌.. நம்ப முடியாத தருணம்.‌‌.. நடிகர் கவின் நெகிழ்ச்சி !

dhanush

கவினின் 'டாடா' படத்தை பார்த்துவிட்டு நடிகர் தனுஷ் பாராட்டியுள்ளார். 

 பிக்பாஸ் கவின் மற்றும் மலையாள நடிகை அபர்ணா இணைந்து நடித்துள்ள திரைப்படம் ‘டாடா’. அறிமுக இயக்குனர் கணேஷ் பாபு இயக்கத்தில் உருவான இந்த படம் கடந்த பிப்ரவரி 10-ஆம் தேதி வெளியானது. கவினுடன் இணைந்து இந்த படத்தில் ஹரிஷ், புகழ், பிரதீப் ஆண்டனி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

dhanush

இந்த படத்தை ஒலிம்பியா மூவிஸ் சார்பில் எஸ்.அம்பேத் குமார் தயாரித்துள்ளார். ஜென் மார்ட்டின் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.  ஒரு அப்பா, அம்மா துணையில்லாமல் தன் மகனை எப்படி வளர்கிறார் என்பதுதான் இந்த படத்தின் கதை. இதை மிகவும் சுவாரசியமாக காட்டியிருந்தார் இயக்குனர். தற்போது இந்த அனைவரிடமும் பாராட்டை பெற்று வருகிறது. 

dhanush

இந்நிலையில் 'டாடா' படத்தை பார்த்த நடிகர் தனுஷ், கவினை வெகுவாக பாராட்டியுள்ளார். இது குறித்து நெகிழ்ச்சி பதிவு ஒன்றை கவின் வெளியிட்டுள்ளார்.

அதில் 

ஹாய் கவின், நான் தனுஷ் பேசுறேன். 

இதை நான் கேட்டதும் இது உண்மைத்தானா என ஒரு நிமிடம் உறைந்துவிட்டேன். உண்மை என்னவென்றால் அந்த ஃப்ளாஷ் பேக்கிலிருந்து இன்னும் மீளவில்லை. 'டாடா' படத்தை பார்த்துவிட்டு தனுஷ் என்னை பாராட்டியது உண்மையிலே மறக்க முடியாத தருணம். உங்கள் திரைப்படங்கள் அனைத்தையும் திரையில் பார்த்தது எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. உங்கள் சிறந்த திறமையை கண்டு வியந்தேன். ஆனால் இன்று உங்களிடமிருந்து எனக்கு பாராட்டு கிடைத்தது நன்றியால் சுருக்கமுடியாது. வளர்ந்து வரும் என்னை போல் உள்ள நடிகர்களுக்கு உங்களின் பாராட்டுக்கு நன்றி சார் என்று குறிப்பிட்டுள்ளார். 


 

Share this story