கவின் நடிப்பில் உருவாகியுள்ள ‘டாடா’.. நாளை வெளியாகும் முக்கிய அறிவிப்பு !

dada

பிக்பாஸ் கவின் நடித்துள்ள ‘டாடா’ படத்தின் முக்கிய அறிவிப்பு நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் நடிகர் கவின். தற்போது சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகி பிசியாக நடித்து வருகிறார். அந்த வகையில் கவின் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘டாடா’. இந்த படத்தில் கவினுக்கு ஜோடியாக மலையாள நடிகை அபர்ணா தாஸ் நடித்துள்ளார். 

dada

மேலும் இந்த படத்தில் ஹரிஷ், புகழ், பிரதீப் ஆண்டனி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அறிமுக இயக்குனர் கணேஷ் கே.பாபு இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தை ஒலிம்பியா மூவிஸ் சார்பில் எஸ்.அம்பேத் குமார் தயாரித்து வருகிறார். ஜென் மார்ட்டின் இந்தப் படத்திற்கு இசையமைத்து வருகிறார். 

இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்று தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் முக்கிய அறிவிப்பு நாளை காலை 11.10 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அநேகமாக இந்த அறிவிப்பு ரிலீஸ் குறித்து இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Share this story