டிரெண்டிங்கில் கவினின் 'டாடா' டீசர்.. உற்சாகமான படக்குழு !

dada

கவின் நடிப்பில் உருவாகியுள்ள 'டாடா' படத்தின் டீசர் டிரெண்டிங்கில் உள்ளது.

சின்னத்திரை நடிகரான கவின், பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர். அதன்பின் ‘லிப்ட்’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான அவர், தற்போது ‘டாடா’ என்ற படத்தில் நடித்து முடித்திருந்தார். இந்த படத்தை அறிமுக இயக்குனர் கணேஷ் கே.பாபு இயக்கியுள்ளார். 

https://twitter.com/KavinFansClub/status/1611690559172907009?t=UA6Y4Jmt9rto49_y9o5stQ&s=09

இந்த படத்தில் கவினுக்கு ஜோடியாக மலையாள நடிகை அபர்ணா தாஸ் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் ஹரிஷ், புகழ், பிரதீப் ஆண்டனி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஜென் மார்ட்டின் இசையமைத்துள்ளார். 

https://twitter.com/KavinFansClub/status/1611690559172907009?t=UA6Y4Jmt9rto49_y9o5stQ&s=09

ஒலிம்பியா மூவிஸ் சார்பில் எஸ்.அம்பேத் குமார் தயாரித்து வரும் இப்படத்தை ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிடவுள்ளது. ஜனவரியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள இப்படத்தின் டீசர் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது.  'லவ் டுடே' பட பாணியில் உருவாகியுள்ள இந்த படத்தின் டீசர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்த டீசர் கடந்த இரண்டு நாட்களாக யூடியூப் டிரெண்டிங்கில் உள்ளது. அதேபோன்று 4 மில்லியன் பார்வையாளர்கள் இந்த டீசரை பார்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Share this story