இறங்கி குத்தாட்டம் போட்ட கவின்.. 'ப்ளடி பெக்கர்' டீசர் வெளியானது!

bloody begger
இயக்குநர் நெல்சன் திலீப்குமார் தயாரிப்பில், இயக்குநர் சிவபாலன் முத்துகுமார் இயக்கத்தில் நடிகர் கவின் நடிக்கும் 'ப்ளடி பெக்கர்' படத்த்தின் டீசர் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர் கவின். இவர் தற்போது இயக்குநர் சிவபாலன் இயக்கத்தில் 'ப்ளடி பெக்கர்' திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் தீபாவளியன்று (அக் 31) திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இயக்குநர் நெல்சன் திலீப்குமார் தயாரிக்கும், இப்படத்திற்கு ஜென் மார்டின் இசையமைத்துள்ளார். இப்படத்தில் ரெடின் கிங்ஸ்லி, மாருதி பிரகாஷ்ராஜ், சுனில் சுகாதா, அக்சயா ஹரிஹரன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்நிலையில், இப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.
இப்படத்தில் கவின் பிச்சைக்காரன் கேரக்டரில் நடித்திருப்பது டீசர் மூலம் தெளிவாக தெரிகிறது. இந்த டீசரில் கவின் முதலில் இரு கால்களும் இல்லாத மாதிரி நான்கு சக்கரங்கள் கொண்ட பலகையில் சாலையோரத்தில் பிச்சை எடுக்கும் காட்சிகளுடன் டீசர் மூவ் ஆகின்றது. அப்போது, சாலையில் ஒரு சாவு ஊர்வலம் செல்கிறது. அதற்கு கவின் பலகையை விட்டு எந்திரிச்சு குத்தாட்டம் போடுவது தான் இந்த டீசரின் டிவிஸ்ட் ஆக அமைகிறது என்கின்றனர் ரசிகர்கள். இந்த டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Share this story