ஹாய் பட ஹீரோ கவினுக்கு வந்த சந்தோஷமான செய்தி -என்ன தெரியுமா ?

kavin

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகராக இருப்பவர் கவின். தற்போது அவர் கென் ராய்சன் இயக்கத்தில் பிரியங்கா மோகனுடன் புதிய படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் நயன்தாரா ஜோடியாக கவின் நடித்த ‘ஹாய்’ என்ற படம் வெளியானது. இப்படத்தை பாடலாசிரியரும், இயக்குனர் லோகேஷ் கனகராஜிடம் உதவியாளராக பணியாற்றிய விஷ்ணு எடவன் இயக்கினார். இப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. கடந்த 2023ம் ஆண்டு மோனிகா டேவிட் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார் கவின்.

இத்தம்பதிக்கு கடந்த ஜூலை 30ம் தேதி ஒரு ஆண், ஒரு பெண் என இரட்டை குழந்தை பிறந்தது. இந்த மகிழ்ச்சியான செய்தியை கவின் அவரது சோஷியல் மீடியாவில் பகிர்ந்திருந்தார். இந்நிலையில் கவின் தனது இரட்டை குழந்தைகளின் பெயரை அறிவித்துள்ளார். அதன்படி மகனுக்கு தியோ லியோ கவின், மகளுக்கு தியோலினா கவின் என பெயரிட்டுள்ளார். இதனை தனது சோஷியல் மீடியாவில் பகிர்ந்து ‘இறைவனுக்கு நன்றி’ என்று கவின் குறிப்பிட்டுள்ளார். அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Share this story