“உலகத்துல பாதி பிரச்சனைக்கு காரணமே இந்த ‘DaDa’ தாண்டா” வெளியானது 'டாடா' படத்தின் தரமான டீசர்.

photo

பிக்பாஸ் புகழ் கவின் நடிப்பில் அட்டகாசமான தயாராகியுள்ள திரைப்படம் ‘டாடா’. தற்போது இந்த படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

PHOTO

ஒலிம்பியா மூவிஸ் சார்பில் எஸ்.அம்பேத் குமார் தயாரிப்பில், கோலிவுட்டில் வளர்ந்து வரும் நடிகராக வலம்வரும் கவின் மற்றும் மலையாள நடிகை அபர்ணா தாஸ் இணைந்து நடித்துள்ள திரைப்படம்டாடாஇவர்களோடு இணைந்து ஹரிஷ், புகழ், பிரதீப் ஆண்டனி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அறிமுக இயக்குனர் கணேஷ் கே.பாபு இயக்கியுள்ளார். இசையமைப்பாளர் ஜென் மார்ட்டின் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

photo

படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்று தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் படம் குறித்த அடுத்தடுத்த அப்டேட் வெளியாகிவரும் நிலையில், தற்போது படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. நேற்றய தினம் இது குறித்த அறிவிப்பு போஸ்டர் வெளியான நிலையில் தற்போது டீசர் வெளியாகியுள்ளது.

photo

 இந்த டீசரை பிரபலங்கலான நடிகை ஐஷ்வர்யா ராஜேஷ், தயாரிப்பாளர் எஸ். ஆர் பிரபு, நடிகர் ஆர்யா, இயக்குநர் நெல்சன் ஆகியோர் வெளியிட்டுள்ளனர். படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் வெளியிட உள்ளனர். தொடர்ந்து இம்மாதம் வெளியாகவுள்ள நிலையில் விரைவில் படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Share this story